விநாயகர் போற்றி
- வேலன் மூத்தோனே
- வேல முகத்தோனே
போற்றி போற்றி - முழு முதலோனே
- மூலா தாரத்தோனே
போற்றி போற்றி - ராஜ கம்பீர விநாயகனே
- எமை காக்கும் நாயகனே
போற்றி போற்றி - பத்தி புத்தி சத்தி சித்தி முத்தி
தரும் கற்பகத் தருவே
போற்றி போற்றி
குரு போற்றி - கந்த குரு நாதா
- கவச குரு நாதா
- கருணை குரு நாதா
போற்றி போற்றி - அருண கிரி நாதா
- அருள் குரு நாதா
- அன்பு குரு நாதா
போற்றி போற்றி
நாமம் போற்றி - குமரா குருபரா
- முருகா மயூரா
- கந்தா கடம்பா
- குகா இடும்பா
- கார்த்திகேயா ஓம்காரா
போற்றி போற்றி - கிருபாகரா கதிர்காமா
- சரவணா சுப்பிரமணியா
- தணிகாசலா செந்திலாண்டவா
- தண்டாயுதபாணியே சேயோனே
போற்றி போற்றி - அபயா அனகா
- அமலா விமலா
- அமரா அங்காரகா
போற்றி போற்றி - கமலா கனலா
- வரதா விருதா
- லீலா வினோதா
போற்றி போற்றி
வேல் போற்றி - சக்திவேல் செவ்வேல்
- சீர்வேல் சூர்வேல்
- கதிர்வேல் கூர்வேல்
போற்றி போற்றி - வெற்றிவேல் வீரவேல்
- வச்சிரவேல் வடிவேல்
- ஞானவேல் அயில்வேல்
போற்றி போற்றி
வர்ணனை போற்றி - தண்டையும் வெண்டையம்
- சதங்கையும் சிலம்பம்
- அணி சீர் பாதம்
போற்றி போற்றி - குளிர் மார்பும்
- மலர் மாலையும்
- அணியும் அணிகலனும்
போற்றி போற்றி - பன்னிரு புயமும்
- பன்னிரு கரமும்
- பன்னிரு விழியும்
- பன்னிரு செவியும்
போற்றி போற்றி - ஆறு முகமும்
- ஆறு மகுடமும்
- ஆறு படையும்
- ஆறு ஆதாரமும்
- ஆறு கோணமும்
போற்றி போற்றி - கஞ்சமலர் செங்கையும்
- கோவை செவ்வாயும்
- சிந்தும் சிருநகையும்
போற்றி போற்றி - நெற்றி நீரும்
- வெற்றி திலகமும்
- மனக்கும் சந்தனமும்
போற்றி போற்றி - வீர தீர தைர்யமும்
- வேக விவேக வீர்யமும்
போற்றி போற்றி - வேலும் மயிலும்
- சேவலும் கொடியும்
- வெற்றி படையும்
- நடத்தும் நவவீரரும்
போற்றி போற்றி
சீர் மிகு படை புகழ் போற்றி - அயன் அரி அரன்
மனமகிழ் முருகோனே
போற்றி போற்றி - தேவரும் முனிவரும் கணங்களும்
புகழும் பழனி மலை பாலனே
போற்றி போற்றி - எண் திசையும் ஈரேழு லோகமும்
ஆளும் அருணகிரி வாசனே
போற்றி போற்றி - அடியாரும் அடியேனும் அனைவரும்
துதிக்கும் சித்தா தணிகாசலனே
போற்றி போற்றி - பிறவி பிணிக்கு மருந்தே நோய்க்கு
ஔடதமே வைத்திய நாதரே
போற்றி போற்றி - அட்டமா சித்தி தரும்
திருஆவினன்குடி வாழ் அரசே
போற்றி போற்றி - பரமனுக்கு பிரனவம் உபதேசம்
செய்த திருஏரகச் சுவாமிநாதனே
போற்றி போற்றி - குன்று பொடி செய்து சூரன் குடி
கெடுத்த திருசெந்தில் வேலனே
போற்றி போற்றி - அண்டர்முடி காத்து அண்டர்மகள்
மனந்த திருபரங்குண்றம் இனியோனே
போற்றி போற்றி - மனம் குளிர குற வள்ளி உள்ளம்
கவர் திருதணிகை பெருமாளே போற்றி போற்றி - முதிர்ந்த ஞானிக்கு மோட்சம் அருளும்
திருபழமுதிர்ச் சோலை உறைவோனே
போற்றி போற்றி - நவபாசானம் நவலோகம் நவதானிய நவகிரக
நவமணி நவவீரர் நாயகனே
போற்றி போற்றி
குணம் போற்றி - அசுரரை அழித்தோனே
- அமரரை காத்தோனே
போற்றி போற்றி - குன்றில் உறைவோனே
- நெஞ்சில் நிறைவோனே
போற்றி போற்றி - மும்மலம் மாய்ப்போனே
- பற்று அறுப்போனே
போற்றி போற்றி - அடியார்க்கு அருள்வோனே
- அல்லல் அறுப்போனே
போற்றி போற்றி - இன்னல் களைவோனே
- வினைகள் தீர்ப்போனே
போற்றி போற்றி - இடர் நீக்குபவனே
- விடம் முறிப்பவனே
போற்றி போற்றி - ஐயம் நீக்குவோனே
- பயம் போக்குவோனே
போற்றி போற்றி - பகை கெடுப்போனே
- வெற்றி தருவோனே
போற்றி போற்றி - அபயம் அளிப்போனே
- வரம் தருவோனே
போற்றி போற்றி - பக்தியில் மகிழ்வோனே
- முக்தி அளிப்போனே
போற்றி போற்றி - அன்பு விழி அம்புலி வதனம்
அழகிய வடிவோனே
போற்றி போற்றி - குறமகள் தேவமகள்
மனம் சேர்வோனே
போற்றி போற்றி - மயில் நடமிடும்
மயூர வாகனனே
போற்றி போற்றி
சரணம் போற்றி - சங்கரன் புதல்வா
- மலைமகள் குமாரா
- கார்த்திகை மைந்தா
போற்றி போற்றி - மாதவன் மருகா
- வள்ளி நேசா
- தெவசேனா மணாளா
போற்றி போற்றி - பேரானை இளையோனே
- பேராண்மை பெரியோனே
- வேலவா மயில் வாகனனே
போற்றி போற்றி - சோமஸ்கந்த பெருமானே
- சுப்ரமண்ய பெருமானே
- சரவண பவ ஓம்
போற்றி போற்றி
சண்முகா சரணம் சரணம்