Tuesday, September 8, 2009

சூனியக்காரி

பெண்ணே நீ சூனியக்காரி,
என்ன சூனியம் வைத்தாய்?

ஒரு போதைக்கு மறு போதை
மருந்தென அறிந்தவள் நீ

மதுவுக்கு அடிமை பட்டிருந்தவனை
மாது உன்னிடம்,
மயக்கம் கொள்ள செய்தாய்

கள்ளூறும் விழிகள் போதை தருகிறது
உன் அழகில் சொக்கி போயிருக்கிறேன்

போதையில் இருந்தெனை மீட்டாய்
மீண்ட நான்,
மீண்டும் மீள முடியாமல்
உன்னில் மயங்கி கிரங்கி விழத்தானா?

பெண்ணே நீ சூனியக்காரி,
என்ன சூனியம் வைத்தாய்?

Wednesday, July 22, 2009

நானே உருகுகிறேன்

நிலவொளியில்
பாலை தயிர் செய்து,
வெள்ளி மத்தில் கடைந்து,
திரண்ட வெண்ணையில்,
மணக்கும் மல்லிகை
மலர்ச்சாறு இட்டு
செய்த அழகு பதுமையே,
உன் அழகில் -
நானே உருகுகிறேன்
உன் நினைவோ -
மனதில் உறைகின்றது

Wednesday, June 10, 2009

காதல் வேகம்

பூப்பெய்திய மங்கை
பருவ மகன் கண்டு
பூ முகம் மலர்ந்தாள்

மூச்சுக் காற்று பட்டு
அங்கம் உருகினாள்,
வெட்கத்தேன் சிந்தினாள்

அழகிய ஓவியம் -
மயக்கும் இனிய
பாவை முகம்,
பரவசமூட்டியது

ஆசை உந்த
இச்சை ஈடேற்ற
காற்றும் புகாமல்
பஞ்சு தேகம்
இறுக்கி அணைத்தான்

மோகம் தனிய,
சிறகு - மெல்லிய
காதலி உதட்டில்
உணர்ச்சி பொங்க
காதலன் முத்தமிட்டான்

முத்தச் சத்தம்
விண்ணை பிளந்தது

வானம் மன்றத்தில்
மோகக் காட்சி -
காதல் வேகம்,
காதலர் மேகம்

Monday, April 20, 2009

கண்ணீர் அஞ்சலி

அன்று,
காதலிக்காக கட்டிய மணல் கோட்டையை
அலையே, நீ கரைத்தாய்
தோள் சாய்ந்து விம்மினாள் காதலி;
இன்று,
காதல்க்காக கட்டிய மனக்கோட்டையை
அவளே உடைத்தாள்,
கால்த் தொட்டு வருந்துகிறாய் நீ;

மனத்தோடு,
தடம் பதிந்திட்டது அவள் நினைவலைகள்;
நுரை அலையே,
பெருகும் என் கண்ணீர் மணித்துளியை
கரையோரம்,
கைகோர்த்து தடம் பதித்து போன
காதலி கால் சுவடுகளில் சேர்த்துவிடு;

அலை விடு தூது

கரைச் சேரும் கடலலை - நீ
காதலில் மூழ்கி தத்தளிக்கும்
என்னை கரை சேர்ப்பாயா?

வீசும் காற்று உவர்க்கிறது -
உப்பு, கடலலை தந்தில்லை
என் கண்ணீர் தந்தது

கடலோசை எழுப்பும் அலை - நீ
அக்கரையில் அவளிடம் என்
காதல் ஓசையையும் எழுப்பாயோ?

ஓயாமல் ஓங்காரம் எழுப்பும் அலை -
ஏங்கும், என் காதல் ரீங்காரம்
அவள் கேக்கச் செய்வாயோ?

Friday, March 20, 2009

இறங்கர்பா

பெண்ணே,
பூ இனம், வண்டினம்
இரண்டிற்கும்
உன் மேல் சினம்

செடி கொடிகளுக்கு கோபம்,
பூக்களுக்கு ஏக்கம்;
கரு வண்டிர்க்கும் சோகம் -
தத்தம் வம்சம் அழிவது
கண்டு, வருத்தம்.

பூக்களுக்கு ஏக்கம்:
கொடியிடையாள்,
காதல் போகி - உல்லாசக் கரு வண்டு,
உன் தேன்பழா செவ்விதழ்
வாடைக்காற்றால் மோகம் கொண்டு,
தினம் உன்
பூ இதழையே மொய்ப்பதால்...

வண்டிர்க்கு சோகம்:
கருவிழியாள்,
சிற்றின்ப சுகி - காமுறும் காதல் வண்டு,
போதை தரும் உன்
மலரிதழ் தேன் உண்டு
மயங்கி, சகி
தன்னைச் சேர கூடு திரும்பாததால்...

உன் அழகில் மூர்ச்சையாகி
தம் வம்சம் விருத்தியாகாமல்
போன பூ, வண்டு இனதிர்க்கு
என் இறங்கலை தெரிவிக்கின்றேன்

என் நிலா

நீ
அழகு தேவதை
வெட்கப் பதுமை
உயிர் ஓவியம் -
வெண் நிலா

காதலன் எனக்கு
தினம் மெல்ல
திரை விலக்கி
உனைக் காட்டினாய் -
வளர்பிறை

பார்க்கப் பார்க்க
பால் முகம்
குளிர் தேகம்
வளர்ந்ததென் காதல் தீ
மோகம் முழுமை -
பௌர்ணமி

என்
மோக அக்னி
மூச்சுக் காற்று
காதல் வேள்வி
உனை உருக்கியாதோ? -
தேய்பிறை

நீ இல்லாவிடில்
என் மனவானம்
சூனியம் - உணர்கிறேன்
அமாவாசை

எனக்காக வளர்ந்து,
என்னால் தேய்ந்து;
காதலி நீ -
என் நிலா

Thursday, March 19, 2009

நானும் நிலவும் குளிர் காய்ந்தத் தருணம்

நிலா பெண் குளிர் காய்கிறாள்..., தனிமயில் -
இல்லை, துணைக்கு நானும்,
அவள் அழகை ரசித்து கொண்டு..., மறைவில்