வீரா அதி வீரா
தீரா அதி தீரா
சூரா அதி சூரா
வேகா அதி வேகா
மோகா அதி மோகா
தேவா அதி தேவா
அரனின் இன் குருவே
பூரணே பரி பூரணனே
சூரன் தலை கொய்தோனே
கவின்மிகு பல்கவி நாயகனே
தேன்தமிழ் மாநில கிழவனே
அண்டர்படை வெற்றித் தலைவனே
தேவசேனை மறுகும் கேள்வனே
குறவஞ்சி இளவள்ளி கள்வனே
வாசநறு மலரணி மார்பனே
மின்னுமரிய பலமணி கிரீடனே
மயில் வாகனனே வேலனே
மலை மகள் மைந்தனே
மத யானை இளையோனே
மா மாயோன் மருகோனே
நின்சீர் பாதம் பணிவேனே
பரிவாய் மைந்தன் எனக்கு - அருள்வாயே
குருவே அருணகிரி நாதனே