Saturday, September 14, 2024

குமரகுரு போற்றி

          விநாயகர் போற்றி
  1. வேலன் மூத்தோனே
  2. வேல முகத்தோனே
    போற்றி போற்றி

  3. முழு முதலோனே
  4. மூலா தாரத்தோனே
    போற்றி போற்றி

  5. ராஜ கம்பீர விநாயகனே
  6. எமை காக்கும் நாயகனே
    போற்றி போற்றி

  7. பத்தி புத்தி சத்தி சித்தி முத்தி
    தரும் கற்பகத் தருவே
    போற்றி போற்றி

    குரு போற்றி

  8. கந்த குரு நாதா 
  9. கவச குரு நாதா
  10. கருணை குரு நாதா
    போற்றி போற்றி

  11. அருண கிரி நாதா
  12. அருள் குரு நாதா
  13. அன்பு குரு நாதா
    போற்றி போற்றி

    நாமம் போற்றி

  14. குமரா குருபரா 
  15. முருகா மயூரா
  16. கந்தா கடம்பா 
  17. குகா இடும்பா
  18. கார்த்திகேயா ஓம்காரா
    போற்றி போற்றி

  19. கிருபாகரா கதிர்காமா
  20. சரவணா சுப்பிரமணியா 
  21. தணிகாசலா செந்திலாண்டவா 
  22. தண்டாயுதபாணியே சேயோனே
    போற்றி போற்றி

  23. அபயா அனகா
  24. அமலா விமலா 
  25. அமரா அங்காரகா
    போற்றி போற்றி

  26. கமலா கனலா
  27. வரதா விருதா
  28. லீலா வினோதா
    போற்றி போற்றி

    வேல் போற்றி

  29. சக்திவேல் செவ்வேல் 
  30. சீர்வேல் சூர்வேல் 
  31. கதிர்வேல் கூர்வேல்
    போற்றி போற்றி

  32. வெற்றிவேல் வீரவேல் 
  33. வச்சிரவேல் வடிவேல் 
  34. ஞானவேல் அயில்வேல்
    போற்றி போற்றி

    வர்ணனை போற்றி

  35. தண்டையும் வெண்டையம்
  36. சதங்கையும் சிலம்பம்
  37. அணி சீர் பாதம்
    போற்றி போற்றி

  38. குளிர் மார்பும்
  39. மலர் மாலையும்
  40. அணியும் அணிகலனும்
    போற்றி போற்றி

  41. பன்னிரு புயமும்
  42. பன்னிரு கரமும்
  43. பன்னிரு விழியும்
  44. பன்னிரு செவியும்
    போற்றி போற்றி

  45. ஆறு முகமும்
  46. ஆறு மகுடமும்
  47. ஆறு படையும்
  48. ஆறு ஆதாரமும்
  49. ஆறு கோணமும்
    போற்றி போற்றி

  50. கஞ்சமலர் செங்கையும்
  51. கோவை செவ்வாயும்
  52. சிந்தும் சிருநகையும்
    போற்றி போற்றி

  53. நெற்றி நீரும்
  54. வெற்றி திலகமும்
  55. மனக்கும் சந்தனமும்
    போற்றி போற்றி

  56. வீர தீர தைர்யமும்
  57. வேக விவேக வீர்யமும்
    போற்றி போற்றி

  58. வேலும் மயிலும் 
  59. சேவலும் கொடியும்
  60. வெற்றி படையும்
  61. நடத்தும் நவவீரரும்
    போற்றி போற்றி

    சீர் மிகு படை புகழ் போற்றி

  62. அயன் அரி அரன்
    மனமகிழ் முருகோனே
    போற்றி போற்றி

  63. தேவரும் முனிவரும் கணங்களும்
    புகழும் பழனி மலை பாலனே
    போற்றி போற்றி

  64. எண் திசையும் ஈரேழு லோகமும்
    ஆளும் அருணகிரி வாசனே
    போற்றி போற்றி

  65. அடியாரும் அடியேனும் அனைவரும்
    துதிக்கும் சித்தா தணிகாசலனே 
    போற்றி போற்றி

  66. பிறவி பிணிக்கு மருந்தே நோய்க்கு
    ஔடதமே வைத்திய நாதரே
    போற்றி போற்றி

  67. அட்டமா சித்தி தரும்
    திருஆவினன்குடி வாழ் அரசே
    போற்றி போற்றி

  68. பரமனுக்கு பிரனவம் உபதேசம்
    செய்த திருஏரகச் சுவாமிநாதனே
    போற்றி போற்றி

  69. குன்று பொடி செய்து சூரன் குடி
    கெடுத்த திருசெந்தில் வேலனே
    போற்றி போற்றி

  70. அண்டர்முடி காத்து அண்டர்மகள்
    மனந்த திருபரங்குண்றம் இனியோனே
    போற்றி போற்றி

  71. மனம் குளிர குற வள்ளி உள்ளம்
    கவர் திருதணிகை பெருமாளே
  72. போற்றி போற்றி

  73. முதிர்ந்த ஞானிக்கு மோட்சம் அருளும்
    திருபழமுதிர்ச் சோலை உறைவோனே
    போற்றி போற்றி

  74. நவபாசானம் நவலோகம் நவதானிய நவகிரக
    நவமணி நவவீரர் நாயகனே 
    போற்றி போற்றி

    குணம் போற்றி

  75. அசுரரை அழித்தோனே
  76. அமரரை காத்தோனே
    போற்றி போற்றி

  77. குன்றில் உறைவோனே
  78. நெஞ்சில் நிறைவோனே
    போற்றி போற்றி

  79. மும்மலம் மாய்ப்போனே
  80. பற்று அறுப்போனே
    போற்றி போற்றி

  81. அடியார்க்கு அருள்வோனே
  82. அல்லல் அறுப்போனே
    போற்றி போற்றி

  83. இன்னல் களைவோனே
  84. வினைகள் தீர்ப்போனே
    போற்றி போற்றி

  85. இடர் நீக்குபவனே
  86. விடம் முறிப்பவனே
    போற்றி போற்றி

  87. ஐயம் நீக்குவோனே
  88. பயம் போக்குவோனே
    போற்றி போற்றி

  89. பகை கெடுப்போனே
  90. வெற்றி தருவோனே
    போற்றி போற்றி

  91. அபயம் அளிப்போனே
  92. வரம் தருவோனே
    போற்றி போற்றி

  93. பக்தியில் மகிழ்வோனே
  94. முக்தி அளிப்போனே
    போற்றி போற்றி

  95. அன்பு விழி அம்புலி வதனம்
    அழகிய வடிவோனே
    போற்றி போற்றி

  96. குறமகள் தேவமகள்
    மனம் சேர்வோனே
    போற்றி போற்றி

  97. மயில் நடமிடும்
    மயூர வாகனனே
    போற்றி போற்றி

    சரணம் போற்றி

  98. சங்கரன் புதல்வா
  99. மலைமகள் குமாரா
  100. கார்த்திகை மைந்தா
    போற்றி போற்றி

  101. மாதவன் மருகா 
  102. வள்ளி நேசா
  103. தெவசேனா மணாளா
    போற்றி போற்றி

  104. பேரானை இளையோனே
  105. பேராண்மை பெரியோனே
  106. வேலவா மயில் வாகனனே
    போற்றி போற்றி

  107. சோமஸ்கந்த பெருமானே
  108. சுப்ரமண்ய பெருமானே
  109. சரவண பவ ஓம்
    போற்றி போற்றி

    சண்முகா சரணம் சரணம்

Monday, August 5, 2024

கிரணங்'கள்'

வான் மயில் 
கண் இமையில் 
இட்ட கரு மை 
கார் மேகமோ...

முழு மதி 
குளிர் விழியாள் 
இமை திறந்தாள்,
எமை நனைத்தாள்...

உள்ளூர பாயும் 
உந்தன் கிரணங்கள் - கள் 
உளமார பருகும் 
எந்தன் சரணங்கள்