Sunday, April 12, 2026

நீ அறிவாயா ?

இரவு பணியில்

மடி கணிணி ஒளியில் 

உன் முகமும் ஒளிர...

முழு மதியும் வான் விட்டு 

அறைக்குள் வந்ததை 

நீ அறிவாயா ?


கார் மேகக் குழலில் 

பஞ்சமி பிறையென சூடிய 

வெண் மல்லிகை வாசத்தில்

என் மோகம் உன் வசத்தில் 

தஞ்சம் புகுந்ததை

நீ அறிவாயா ?


குறுநகை புரிந்து

நீ தலை குனிந்து 

நானத்தில் செந்தேன் சிந்த

நான் அதில் நனைந்தேன் என்று 

நீ அறிவாயா ?


மெல்லிடையாளே,

தரை பட்டும் படாமல் நடக்கையில்

உன் மென் பட்டு தாள் கொலுசுடன்

என் மனமும் மெல்லிசை தாளமிடுவதை

நீ அறிவாயா ?

Saturday, March 14, 2026

திருமலை வேங்கடகிரி சீனிவாசா


நாகாச்சல
வைகுந்தபுரி வேங்கட கிரிவாசா 
கோவிந்தா நமோ நம

திருபதிவாழ் பத்மாவதி மனோஹர சீனிவாசா 
கோவிந்தா நமோ நம

ஏழுமலைசூழ் எழுந்தருள் திருமலைவாசா 
கோவிந்தா நமோ நம

நவநிதியருள் பெருமாள் திருபதிவாசா 
கோவிந்தா நமோ நம

ஆதிமூலம் பூவராஹர் உடனுறை வெங்கடேசா 
கோவிந்தா நமோ நம

திருமகள் நிலமகள் பாதகமலம் நித்யவாசா 
கோவிந்தா நமோ நம

பக்தமனமாழ் நெடுமால்  வேதம்புகழ் கீர்த்திவாசா 
கோவிந்தா நமோ நம

அமரர் சித்தர் ஆழவார் நித்தம் பூசிக்கும் ஈசா 
கோவிந்தா நமோ நம

நித்யானந்தா புருஷோத்தமா அச்சுத்தா அநந்தா 
கோவிந்தா நமோ நம

சிறிய திருவடி பெரிய திருவடி ஆட்கொண்ட நாதா 
கோவிந்தா நமோ நம

Tuesday, March 3, 2026

கிரியே கிளியே

  1. அருண கிரியே அருமை கிளியே
    அமுத மொழியே திருப் புகழே

  2. கருணைக் கடலே கந்த வேலே
    குமர குருவே முருகப் பெருமாளே

  3. சக்தி மகனே ஆறு முகனே
    சேனா பதியே சேவல் கொடியே

  4. அமரர் மீளவே வீரம் சிறந்தே
    சமரம் செய்தே சூரனை கொன்றே

  5. வெற்றி வாகையே தான் சூடியே
    தேவர் கிளையே செழிக்க காத்தோனே

  6. குறிஞ்சிக் கோனே குறத்திக் கேள்வனே
    தெய்வானை துணைவனே திருவானை இளவலே

  7. அயனின் அரசனே அரனின் ஆசானே
    அரியின் மருகனே அலைமகள் பிரியனே

  8. கலைமகள் படைப்பே தங்கத் தமிழே
    சங்கத் தலையே தோகை மயிலேறியே

  9. விரைந்து வந்தே நடனம் ஆடியே
    தன்கழல் சிலம்பே கிண்கிணி சலங்கையே

  10. ஒருசேர இசைக்கவே ஒலிக்கும் தாளத்தே
    உள்ளம் உருகவே சிந்தையில் அமர்ந்தே

  11. என்றும் அடியார்க்கே அருளன்பு பொழிந்தே
    அவரின் இருவினையே முற்றும் அறுத்தே

  12. புத்தி பத்தியே சத்தி சித்தியே
    முத்தி களிப்பே மிக அளிப்பவனே
            போற்றி போற்றியே போற்றி போற்றியே

            Friday, December 26, 2025

            1. Om shri nara simham divya roopam
            2. divya simham mahaa roopam
            3. mahaa simham rudra roopam
            4. rudra simham sundararaja roopam
            5. sundararaja simham Sudarshana roopam
            6. Sudarshana simham rajayoga roopam
            7. rajayoga simham raajagambhira roopam
            8. raajagambhira simham ugra roopam
            9. ugra simham jwala roopam
            10. jwala simham vijaya roopam
            11. vijaya simham vajra-nakaya roopam
            12. vajra-nakaya simham anantha roopam
            13. anantha simham maalola roopam
            14. maalola simham brahmanda roopam
            15. brahmanda simham aganda roopam
            16. aganda simham parabrahma roopam
            17. parabrahma simham varaha roopam
            18. varaha simham aadyantha roopam
            19. aadyantha simham trinetra roopam
            20. trinetra simham vishnu roopam
            21. vishnu simham gnana roopam
            22. gnana simham vidya roopam
            23. vidhya simham jyothi roopam
            24. jyothi simham swarna-alankara roopam
            25. swarna-alankara simham mahaveera roopam
            26. mahaveera simham omkara roopam
            27. omkara simham sookshma roopam
            28. sookshma simham Paramāṇu roopam
            29. paramaanu simham ananda roopam
            30. ananda simham narayana roopam
            31. narayana simham vasudeva roopam
            32. vasudeva simham panchabootha roopam
            33. panchabootha simham purushottama roopam
            34. purushottama simham samhara roopam
            35. samhara simmam krodha roopam
            36. krodha simmam mahakaala roopam
            37. mahakaala simmam mrityunjaya roopam
            38. mrityunjaya simmam mitra roopam
            39. mitra simmam sakththi roopam
            40. sakththi simmam siddhi roopam
            41. siddhi simmam moksha roopam
            42. moksha simmam hiranya-varna roopam
            43. hiranya-narna simman nithya roopam
            44. nithya simmam lakshmi-alingana roopam
            45. lakshmi-alingana simmam trikaala roopam
            46. trikaala simmam abhayavarada roopam
            47. abhayavarada simmam anugraha roopam
            48. anugraha simmam prasanna roopam
            49. prasanna simmam prakasha roopam
            50. prakasha simmam karunya roopam
            51. karunya simmam tejomaya roopam 
            52. tejomaya simmam veerya roopam
            53. veerya simmam parakrama roopam
            54. parakrama simmam mangala roopam
            55. mangala simmam bhaktha-priya roopam
            56. bhaktha-priya simmam swayambu roopam
            57. swayambu simmam sathya roopam
            58. sathya simmam prahlada-palaka roopam
            59. Prahlada-palaka simmam Stambhodhbhava roopam
            60. Stambhodhbhava simmam pratyaksha roopam
            61. pratyaksha simmam seegra-raksha roopam
            62. seegra-raksha simmam sringaara roopam
            63. sringaara simmam maharaja roopam
            64. maharaja simmam yagna roopam
            65. yagna simmam shesha-sayana roopam
            66. sesha-sayana simmam padmasana roopam
            67. padmasana simmam garudhadhwaja roopam
            68. garudadhwaja simmam Dhanvantari roopam
            69. Dhanvantari simmam amirdha roopam
            70. Amirdha simmam amara roopam
            71. amara simmam parama-aushadha roopam
            72. param-aushadha simmam roga-nivarana roopam
            73. roga-nivarana simmam bheeshana roopam
            74. bheeshana simmam Bhadra roopam
            75. Bhadra simmam Hari roopam
            76. Hari simmam sankata-mochana roopam
            77. Sankata-mochana simmam paramaguru roopam
            78. Paramaguru simmam Janardhana roopam
            79. Janardhana simmam Jagannatha Roopam
            80. Jagannatha simmam Mahadeva roopam
            81. Mahadeva simmam Eeshwara roopam
            82. Eeshwara simmam hara roopam
            83. hara simmam samsara-muktha roopam
            84. samsara-muktha simmam panchayutha roopam
            85. panchayutha simmam Aparajitha roopam
            86. Aparajitha simmam aparanji-dega roopam
            87. aparanji-dega simmam Giridhara roopam
            88. Giridhara simmam Devaraja roopam
            89. Devaraja simmam visa-nasanaya roopam
            90. visa-nasanaya simmam vighna-harta roopam
            91. vighna-harta simmam Subrahmanya roopam
            92. Subrahmanya simmam mahabaahu roopam
            93. mahabaahu simmam mahapurusha roopam
            94. mahapurusha simmam ahobila roopam
            95. Ahobila simmam Sriramar-sevitha roopam
            96. SriRamar-sevitha simmam Anjaneyar-poojitha roopam
            97. Anjaneyar-poojitha simmam achyutha roopam
            98. achyuta simmam Govinda roopam
            99. Govinda simmam pradyumna roopam
            100. Pradyumna simmam Anirudha roopam
            101. Anirudha simmam Sankarshana roopam
            102. Sankarshana simmam manmadha roopam
            103. manmadha simmam saligrama roopam
            104. Saligrama simmam ratna-kireeti roopam
            105. ratna-kireeti simmam veda roopam
            106. veda simmam Navagraha-nayaka roopam
            107. Navagraha-nayaka simmam punya-theertha roopam
            108. punya-theertha simmam parama-dayaka roopam
            109. parama-dayaka simmam panaga-priya roopam
            110. panaga-priya simmam Tulasi-gandha roopam
            111. Tulasi-gandha simmam poojiyarchitha roopam
            112. Poojiyarchitha simmam maatha pitha roopam
            113. maatha pitha simmam vatsalya roopam
            114. vatsalya simmam vaikuntha-vaasa roopam
            115. vaikuntha vaasa simmam sarva roopam
            116. sarvam simmam Sri nara simmam namo namah









            Thursday, August 21, 2025

            படுந்துயராற்ற வேண்டுதல்

            கொத்துக் கொத்துக் கொத்து...

            பழி வாங்கிடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            பகை வென்றிடக் 
            கொத்துக் கொத்துக் கொத்து...

            விடம் ஏற்றிடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            செத்துப் போகக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அனல் தகிக்கக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            ரணம் ஆற்றிடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            சினம் தனிந்திடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            மனம் குளிரக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            தீமை மறக்காமல்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            சூது செய்தாரைக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            தீது இழைத்தோரைக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அரசியல் பிழைத்தோரைக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அறம் கூற்றாகக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அசுர வேகத்தில்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அச்சமுர அச்சமுரக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            பாவம் தீர்த்திடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            விடாது தொடர்ந்துக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            மனம் வெதும்புகிண்றேன்
            இறைவன் கேட்கவில்லை...
            இயற்கையே வேண்டுகிண்றேன்,
            படுந்துயராற்ற நல்லரவே
            பழிவாங்கு எனக்காக...

            கொத்துக் கொத்துக் கொத்து...

            நெஞ்சம் பொறுக்குதில்லையே
            கொத்துக் கொத்துக் கொத்து...

            Tuesday, June 17, 2025

            வீர தீர சூரா

            வீரா அதி வீரா 
            தீரா அதி தீரா
            சூரா அதி சூரா
            வேகா அதி வேகா
            மோகா அதி மோகா
            தேவா அதி தேவா


            அரனின் இன் குருவே
            பூரணே பரி பூரணனே
            சூரன் தலை கொய்தோனே
            கவின்மிகு பல்கவி நாயகனே
            தேன்தமிழ் மாநில கிழவனே


            அண்டர்படை வெற்றித் தலைவனே
            தேவசேனை மறுகும் கேள்வனே
            குறவஞ்சி இளவள்ளி கள்வனே
            வாசநறு மலரணி மார்பனே
            மின்னுமரிய பலமணி கிரீடனே


            மயில் வாகனனே வேலனே
            மலை மகள் மைந்தனே
            மத யானை இளையோனே
            மா மாயோன் மருகோனே


            நின்சீர் பாதம் பணிவேனே
            பரிவாய் மைந்தன் எனக்கு - அருள்வாயே
            குருவே அருணகிரி நாதனே


            Thursday, May 15, 2025

            அலையும் ஆணே

            முழு நிலவொளியில் நின்
            தளிர் கரம் பற்றிய
            குளிர் இரவு...

            கடற் கரை ஓரம்
            கால்கள் தடம் பதித்து
            தோல்கள் உரசி நடக்க...

            விடுகதை கேட்டாய் ...
            பொங்கும் பால் அலை
            ஆண் பாலா பென் பாலா ?

            ...

            உன் பின் அலையும் 
            நான் மட்டும் அல்ல,
            உன் கால் மட்டும் வருடி
            உன் தடம் மட்டும் திருடி
            உனை மீண்டும் மீண்டும் 
            தீண்டும் அலையும் ஆணே...

            தணிந்த அலை 
            உனது தடத்தை பிரித்தது,
            எனது தடமும் தனித்தே
            ஆனது அனாதை

            மோகப் போராட்டம் என்
            உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

            ...

            மடியில் தலை வைத்து
            பெண் நிலவை ரசித்தேன்
            மலர்ந்த மல்லிகை முகம்
            பொழிந்தது மோகத் தேன்

            சில நேரம் முழு மதியை
            மேக முடி மூடி மறைக்க...
            வேகக் காற்றை வீசி விரைந்து
            தேகத் திரையை விலக்கும்
            கடல் அலையும் ஆணே...

            மோகப் போராட்டம் என்
            உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

            ...

            மடியில் புதைந்த முகத்தை
            முடி திரை போட்டு
            மார்பில் மறைப்பாய்...
            தனத்தில் முத்தமிட்டால்
            வெட்கத்தில் சிரிப்பாய்...

            உன் சிரிப்பலை என் இதயத்தில்
            சிற்றலை எழுப்பும்,
            சீற்றம் கொண்ட கடல்
            பேரலை எழுப்பும்...
            பொறாமையில் பொற்றாமரை 
            மார் மேல் விழுந்து
            (ந)அனைக்கும் அலையும் ஆணே...

            மோகப் போராட்டம் என்
            உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

            ...

            மோகத்தில் மெழுகென நினது கரத்தில்
            உருகி சாய்ந்து விழ வேன்டும்...

            பிரியமான நேரம் இனிதே கடக்கும்...
            பிரியும் நேரம் இதயம் கனக்கும்

            கருத்த கடலும் ஓலம் எழுப்பும்
            அழுதே வடியும் உவர்க்கும் அலையும் ஆணே...

            மோகப் போராட்டம் என்
            உணர்வலைக்கும் கடலலைக்கும் ...