Thursday, August 21, 2025

படுந்துயராற்ற வேண்டுதல்

கொத்துக் கொத்துக் கொத்து...

பழி வாங்கிடக்
கொத்துக் கொத்துக் கொத்து...

பகை வென்றிடக் 
கொத்துக் கொத்துக் கொத்து...

விடம் ஏற்றிடக்
கொத்துக் கொத்துக் கொத்து...

செத்துப் போகக்
கொத்துக் கொத்துக் கொத்து...

அனல் தகிக்கக்
கொத்துக் கொத்துக் கொத்து...

ரணம் ஆற்றிடக்
கொத்துக் கொத்துக் கொத்து...

சினம் தனிந்திடக்
கொத்துக் கொத்துக் கொத்து...

மனம் குளிரக்
கொத்துக் கொத்துக் கொத்து...

தீமை மறக்காமல்
கொத்துக் கொத்துக் கொத்து...

சூது செய்தாரைக்
கொத்துக் கொத்துக் கொத்து...

தீது இழைத்தோரைக்
கொத்துக் கொத்துக் கொத்து...

அரசியல் பிழைத்தோரைக்
கொத்துக் கொத்துக் கொத்து...

அறம் கூற்றாகக்
கொத்துக் கொத்துக் கொத்து...

அசுர வேகத்தில்
கொத்துக் கொத்துக் கொத்து...

அச்சமுர அச்சமுரக்
கொத்துக் கொத்துக் கொத்து...

பாவம் தீர்த்திடக்
கொத்துக் கொத்துக் கொத்து...

விடாது தொடர்ந்துக்
கொத்துக் கொத்துக் கொத்து...

மனம் வெதும்புகிண்றேன்
இறைவன் கேட்கவில்லை...
இயற்கையே வேண்டுகிண்றேன்,
படுந்துயராற்ற நல்லரவே
பழிவாங்கு எனக்காக...

கொத்துக் கொத்துக் கொத்து...

நெஞ்சம் பொறுக்குதில்லையே
கொத்துக் கொத்துக் கொத்து...

Tuesday, June 17, 2025

வீர தீர சூரா

வீரா அதி வீரா 
தீரா அதி தீரா
சூரா அதி சூரா
வேகா அதி வேகா
மோகா அதி மோகா
தேவா அதி தேவா


அரனின் இன் குருவே
பூரணே பரி பூரணனே
சூரன் தலை கொய்தோனே
கவின்மிகு பல்கவி நாயகனே
தேன்தமிழ் மாநில கிழவனே


அண்டர்படை வெற்றித் தலைவனே
தேவசேனை மறுகும் கேள்வனே
குறவஞ்சி இளவள்ளி கள்வனே
வாசநறு மலரணி மார்பனே
மின்னுமரிய பலமணி கிரீடனே


மயில் வாகனனே வேலனே
மலை மகள் மைந்தனே
மத யானை இளையோனே
மா மாயோன் மருகோனே


நின்சீர் பாதம் பணிவேனே
பரிவாய் மைந்தன் எனக்கு - அருள்வாயே
குருவே அருணகிரி நாதனே


Thursday, May 15, 2025

அலையும் ஆணே

முழு நிலவொளியில் நின்
தளிர் கரம் பற்றிய
குளிர் இரவு...

கடற் கரை ஓரம்
கால்கள் தடம் பதித்து
தோல்கள் உரசி நடக்க...

விடுகதை கேட்டாய் ...
பொங்கும் பால் அலை
ஆண் பாலா பென் பாலா ?

...

உன் பின் அலையும் 
நான் மட்டும் அல்ல,
உன் கால் மட்டும் வருடி
உன் தடம் மட்டும் திருடி
உனை மீண்டும் மீண்டும் 
தீண்டும் அலையும் ஆணே...

தணிந்த அலை 
உனது தடத்தை பிரித்தது,
எனது தடமும் தனித்தே
ஆனது அனாதை

மோகப் போராட்டம் என்
உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

...

மடியில் தலை வைத்து
பெண் நிலவை ரசித்தேன்
மலர்ந்த மல்லிகை முகம்
பொழிந்தது மோகத் தேன்

சில நேரம் முழு மதியை
மேக முடி மூடி மறைக்க...
வேகக் காற்றை வீசி விரைந்து
தேகத் திரையை விலக்கும்
கடல் அலையும் ஆணே...

மோகப் போராட்டம் என்
உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

...

மடியில் புதைந்த முகத்தை
முடி திரை போட்டு
மார்பில் மறைப்பாய்...
தனத்தில் முத்தமிட்டால்
வெட்கத்தில் சிரிப்பாய்...

உன் சிரிப்பலை என் இதயத்தில்
சிற்றலை எழுப்பும்,
சீற்றம் கொண்ட கடல்
பேரலை எழுப்பும்...
பொறாமையில் பொற்றாமரை 
மார் மேல் விழுந்து
(ந)அனைக்கும் அலையும் ஆணே...

மோகப் போராட்டம் என்
உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

...

மோகத்தில் மெழுகென நினது கரத்தில்
உருகி சாய்ந்து விழ வேன்டும்...

பிரியமான நேரம் இனிதே கடக்கும்...
பிரியும் நேரம் இதயம் கனக்கும்

கருத்த கடலும் ஓலம் எழுப்பும்
அழுதே வடியும் உவர்க்கும் அலையும் ஆணே...

மோகப் போராட்டம் என்
உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

Wednesday, March 5, 2025

சேயென வரவேணும் - 2

குரு அருண கிரி யார் பாட
குக கமல சீர் பாத மாட 
மணி சலங்கையு மிசை மீட்ட - வலியதோல்

அணி கடம்ப பூ மணம் வீச 
கரிய முகில் குழல் ஆட
கறு மேகம் வானில் ஒருசேர - அதைக்கண்டு

அயில் மயில் தோகை விரித்தாட
கந்த கருணை மழை பொழிந்தாட
சக்தி வேல் செம்பூ கரத்திலாட - தழுவிஎனது

சேயென மடி மீதாட வரவேணும் 

ஊக்கம், உத்வேகம் : 

https://www.youtube.com/watch?v=1-V45F-nzt8&t=216s 

https://kaumaram.com/thiru/nnt1053_u.html



Saturday, January 25, 2025

தையில் மழை

மாதத் தையில் -

மேகப் பையில் இருந்து

மோக அம்பை எடுத்து

மழை அன்பை தொடுத்து

பூமி பாவை மனதை தைத்தான்

வானத் தலைவன்

சேயேன சேராயோ

மருகா
முருகா என
உருகா எனை -

மறுக்கா தெனை
ஆட் கொள
அருள் செய்

மறவா துனை
பிடி கொள
துணை செய்

பாத கமலம் பற்ற
உனது புகழும் போற்ற
வகை செய்

பிரிவது உயிர்கொள்
பெரியது துயர்கள்
பரிவது துணைகொள்
புரியது உயர்கொள 
அன்பு செய்

வேல் விளையாடி
மயில் நடமாடி
அயில் நகையாடி
சிலம்பு இசைபாடி
கடம்பு வாசம் பரவி 
மயல் தீர கடுகி
எனை குறுகாயோ

அழகா மோகா 
அருளா அன்பா
கருணா நாதா
வேலா வீரதீரா 
குமரா குருபரா
அருணகிரி வாசா
கந்தா சரவணா
குகா சண்முகா
கிருபாகரா கிரிதரா
என் சேயேன
எனை சேராயோ

அருள் வரம் தாராயோ