- அருண கிரியே அருமை கிளியே
அமுத மொழியே திருப் புகழே - கருணைக் கடலே கந்த வேலே
குமர குருவே முருகப் பெருமாளே - சக்தி மகனே ஆறு முகனே
சேனா பதியே சேவல் கொடியே - அமரர் மீளவே வீரம் சிறந்தே
சமரம் செய்தே சூரனை கொன்றே - வெற்றி வாகையே தான் சூடியே
தேவர் கிளையே செழிக்க காத்தோனே - குறிஞ்சிக் கோனே குறத்திக் கேள்வனே
தெய்வானை துணைவனே திருவானை இளவலே - அயனின் அரசனே அரனின் ஆசானே
அரியின் மருகனே அலைமகள் பிரியனே - கலைமகள் படைப்பே தங்கத் தமிழே
சங்கத் தலையே தோகை மயிலேறியே - விரைந்து வந்தே நடனம் ஆடியே
தன்கழல் சிலம்பே கிண்கிணி சலங்கையே - ஒருசேர இசைக்கவே ஒலிக்கும் தாளத்தே
உள்ளம் உருகவே சிந்தையில் அமர்ந்தே - என்றும் அடியார்க்கே அருளன்பு பொழிந்தே
அவரின் இருவினையே முற்றும் அறுத்தே - புத்தி பத்தியே சத்தி சித்தியே
முத்தி களிப்பே மிக அளிப்பவனே
Tuesday, March 3, 2026
கிரியே கிளியே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment