நாகாச்சல வைகுந்தபுரி வேங்கட கிரிவாசா
கோவிந்தா நமோ நம
திருபதிவாழ் பத்மாவதி மனோஹர சீனிவாசா
கோவிந்தா நமோ நம
ஏழுமலைசூழ் எழுந்தருள் திருமலைவாசா
கோவிந்தா நமோ நம
நவநிதியருள் பெருமாள் திருபதிவாசா
கோவிந்தா நமோ நம
ஆதிமூலம் பூவராஹர் உடனுறை வெங்கடேசா
கோவிந்தா நமோ நம
திருமகள் நிலமகள் பாதகமலம் நித்யவாசா
கோவிந்தா நமோ நம
பக்தமனமாழ் நெடுமால் வேதம்புகழ் கீர்த்திவாசா
கோவிந்தா நமோ நம
அமரர் சித்தர் ஆழவார் நித்தம் பூசிக்கும் ஈசா
கோவிந்தா நமோ நம
நித்யானந்தா புருஷோத்தமா அச்சுத்தா அநந்தா
கோவிந்தா நமோ நம
சிறிய திருவடி பெரிய திருவடி ஆட்கொண்ட நாதா
கோவிந்தா நமோ நம
No comments:
Post a Comment