Sunday, April 12, 2026

நீ அறிவாயா ?

இரவு பணியில்

மடி கணிணி ஒளியில் 

உன் முகமும் ஒளிர...

முழு மதியும் வான் விட்டு 

அறைக்குள் வந்ததை 

நீ அறிவாயா ?


கரு மேகம் குழலில் 

பஞ்சமி பிறையென சூடிய 

வெண் மல்லிகை வாசத்தில்

என் மோகம் உன் வசத்தில் 

தஞ்சம் புகுந்ததை

நீ அறிவாயா ?


குறுநகை புரிந்து

நீ தலை குனிந்து 

நானத்தில் செந்தேன் சிந்த

நான் அதில் நனைந்தேன் என்று 

நீ அறிவாயா ?


மெல்லிடையாளே,

தரை பட்டும் படாமல் நடக்கையில்

உன் மென் பட்டு தாள் கொலுசுடன்

என் மனமும் மெல்லிசை தாளமிடுவதை

நீ அறிவாயா ?

No comments:

Post a Comment